.

நம்பிக்கையைத் தொலைத்த ஒரு இரவில்

வானத்தைப் பார்த்தபடி நான்..

மேகத் திரைச்சேலையின்பின் நின்றபடி

எட்டிப் பார்க்கிறது நிலவு

full_moon

அது யுகம் யுகமாய்

ஆறுதலைப் பொழிந்தபடியிருப்பதாய்

ஒரு கற்பனையை

மூட்டி வளர்த்து குளிர்காய முனைகிறது மனம்.

ஆனால் அதன்மீதே நீரூற்றி

அனைத்தபடியும் இருக்கிறது

அதே மனம்.

.

நம்பிக்கையைத் தொலைத்த அந்த இரவு

நீண்டு கொண்டேயிருக்கிறது..

.

.

இல்லறம்

.

சிந்திக் கிடக்கின்றன..

கண்ணாடித் துண்டுகளும்

காலின் ரத்தமும்

உடைந்து சிதறிய

பாத்திரம் குறித்த

கனவுகளும்

.

Advertisements