fire on tree

.

காய்ந்த மரத்தில்

தீ படர்ந்தது..

.

‘சடசட’வென

எக்காளமிட்டபடி

பற்றியெரிந்தது..

.

இருட்டில்

தங்கக் குழம்புபோல்

பிரகாசித்தது

அதன் உடல்..

.

‘ஒளிரும் தன்மை

நமக்கும் உண்டா?’ என்று

தன்னைத் தானே

வியந்தது

முன்பு காய்ந்திருந்த

அந்த மரம்..

.

Advertisements