road side

.

நான் உற்றுப் பார்த்து

உறுதி செய்துகொண்டேன்

அவர்கள் நாய்களோ பன்றிகளோ

எருமைகளோ அல்ல..

ஆனாலும் சாலையோரத்தில்தான் வசிக்கிறார்கள்..

.

உண்பதும் உறங்குவதும் உடலுறவும் கூட

வெட்டவெளியில்தான்..

மழை வந்தால் எங்கே ஒதுங்குவார்கள்

என்று ஆச்சர்யப்பட்டாள் மனைவி

நாய்களும் பன்றிகளும் எப்படி ஒதுங்குமோ

அப்படி என்றேன் நான்..

ஆனாலும் நிச்சயமாய் அவர்கள் மனிதர்கள்தான்..

.

சொந்த வீடு வாங்கும் கனவைப்

பேசியபடிவந்த எங்களையும்

ஒரு வீட்டில் வசிப்பதே

கனவான அவர்களையும்

இணையாக நிற்கவைத்த

டிராஃபிக் சிக்னலின் சிகப்பு விளக்கை

தற்செயல் என்று நம்பமறுத்தது மனம்.

.

Advertisements