power cut

.

மெழுகுவர்த்தியின் ஒளி

சுவரில் நடனமிட..

.

பல்லியின் ஒலி

இருளில் எதிரொலிக்க..

.

அசையாத மின்விசிறியை

வெக்கை சுற்றிக்கொண்டிருக்க..

.

இருவரின் கண்களின் மீதும்

நிழல் படிந்திருக்க..

.

சலனமற்று

அமர்ந்திருந்தாய் நீ..

.

என்ன நினைக்கிறாய்

என்று ஆராய்ந்தபடி நான்..

.

உன் முகத்தை வருடுவதற்காக

நீட்டிய விரல்களில்

ஈரம் ஒட்டியது..

.

நான் பேசுவதற்கு வார்த்தைகளைத்

தேடிக்கொண்டிருந்தபோது

இடைவெளியை மேலும்

இறுக்கமாக்கும் விதத்தில்

பெருமூச்செரிந்தாய்..

.

வார்த்தைகளைத்

தேடுவதை விட்டுவிட்டு

திடீரென்று மின்சாரம்

வந்துவிடக்கூடாதா என்று

ஏங்கத் தொடங்கினேன்.

.

Advertisements