Traffic Jam

.

ஆவி பறக்கப் பளபளக்கும்

தார்ச் சாலைகளின் சந்திப்பு..

.

உருகியோடியது

அக்னி நட்சத்திரம்..

.

தோலைப் பொறித்தது

உஷ்ணக் காற்று..

.

கூசும் கண்களில்

போக்குவரத்து விளக்கின்

பச்சைக்கான ஏக்கம்..

.

ஏங்கி வியர்த்து

ஒரு பகுதி மக்கள் நிற்க

மற்றவர்கள் பாய்ந்து நகர்ந்தார்கள்

.

குளிர்சாதன காரின்

கூலிங் கிளாஸ் பெண்ணுக்கும்

சேலை முக்காடிட்டு

சாலை பெறுக்குபவளுக்குமான

இடைவெளியில்

சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தது

இந்தியப் பொருளாதாரம்..

traffic signal

Advertisements