time

.

சுண்டப்பட்ட நாணயம்

சுழன்று கொண்டிருந்தது

அந்தரத்தில்..

.

காலம்

அதன் அடுத்த அடியை

எடுத்து வைக்கக் காத்து நின்றது..

.

புறப்பட்டு

வாசலில் நின்றபடி

முதலில் எங்கு போவதென

யோசித்தேன்..

.

எதிர் வீட்டில்

மூக்குச் சளி வழியும்

குழந்தையோடு சேர்ந்து

காலமும் சிரித்தது

.

காரணமேதுமின்றி தீர்மானித்துக்

காலடி வைத்தேன்..

நாணயத்தோடு சேர்ந்து

காலமும் தரையில் விழுந்தது.

.

Advertisements