ஆயிரம் முறை யோசித்து

பலநூறு ஒத்திகைகள் பார்த்து

வெளிப்படுத்திய காதலை மறுக்க

உனக்கு ஒரு நொடிகூட ஆகவில்லை..

சொல்லி முடிப்பதற்குள் மறுத்துவிட்டாய்.

.

நிறைய அனுபவப்பட்டிருப்பாய்

அல்லது

என்றாவது நான் சொல்வேனென்று

மறுக்கக் காத்திருந்திருப்பாய்..

.

மேலும் நான் காயப்படாமலிருக்க

என் உறைந்த மௌனத்தை உடைத்துவிடாமல்

சொல்லிக்கொள்ளாமலே மெல்ல விலகிவிட்டாய்..

.

அவமானத்தின் கரையில்

அழுதபடி நிற்கிறேன்..

.

நீ மறுத்துவிட்டால் என்னசெய்வதென்றும்

ஆயிரம் முறை யோசித்து

பலநூறு ஒத்திகைகள் பார்த்திருக்கிறேன்

ஆனால் அவையும்

என்னைக் கைவிட்டுவிட்டன..

.