தீவு

.

இமைக்க மறந்து

நின்றது காலம்

.

வெளி

ஒரு புள்ளியாய்

சுருண்டது

.

செவியளவை

மிஞ்சிய சப்தம்

நிசப்தமாகவே கேட்டது

.

இருட்டின் உச்சத்தில்

ஒளியின் பிரவாகம்..

ஒளியின் உச்சத்தில்

இருளின் பேராழம்..

.

வாசனைக்கும்

துர்நாற்றத்துக்குமான

எல்லை அழிவுற்றது

.

அறுசுவைகளை மிஞ்சியது

எச்சிலின் சுவை

.

வியர்வையை உடுத்திக்கொண்டது

நிர்வாணம்..

.

வெப்பத்தின் உச்சத்தில்

ஈரம் கசிந்தது

.

புணர்ச்சியின் முடிவில்

மீண்டும்

இயங்கத் தொடங்கியது

பிரபஞ்சம்.

.