Nanjupuram Poster

.

நான் இயக்கியிருக்கும் ‘நஞ்சுபுரம்’ திரைப்படத்தில், கதாநாயகனின் பெற்றோர் பிரத்யேகமாக ஒரு பரணைக் கட்டி அதன்மீது நாயகனை நாற்பது நாட்களுக்குத் தங்கவைப்பதுபோல் ஒரு கதைச்சூழல் வருகிறது. நாயகனுக்கு இந்த ஏற்பாடு பிடிக்காவிட்டாலும் பெற்றோருக்காக உடன்படுகிறான். அவனது தனிமையை விளக்க நாட்டுப்புற மெட்டில் ஒரு பாடல் போட வேண்டுமென்று நான் என் படத்தின் இசையமைப்பாளராகவும் இருக்கும் ராகவிடம் கேட்டேன். அவரால் ஒரு நாட்டுப்புறப் பாடலை சிறப்பாகச் செய்யமுடியுமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருந்தது. ஆனால் அவர் போட்டுக்காட்டிய முதல் மெட்டிலேயே அசத்திவிட்டார். எங்கள் படத்துக்காக நாங்கள் முதலில் பதிவு செய்த பாடலும் அதுதான். புஸ்பவனம் குப்புசாமி பாடியிருக்கிறார். கவிஞர் மகுடேசுவரன் எழுதிய பாடல் வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

.

NanjuPuram Stills

.

பல்லவி :

ஊருல உனக்கொரு மேட

வானுல உனக்கொரு மஞ்சம்

பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா

உனக்குக் கீழொரு உலகம்

தனக்குத் தானா இயங்கும்

காணும் காட்சி கடவுள் காட்சியடா

.

பூமியெலாம் மைதானம் பொட்டல்வெளித் தாம்பாளம்

ஆலகாலப் பரிகாரம் அந்தரத்தில் சஞ்சாரம்

.

nanjupuram stills

.

சரணம் 1 :

சர்ப்ப பயம் உன்ன முடக்க

சாமம் என்ன நண்பகல் என்ன

ஆச முகம் காணவும் இல்ல

அன்பு வார்த்த பேசவும் இல்ல

.

ஆலமர விழுதானாலும்

அதுபடுக்கும் மண்மடி மேல

வாலிலாத குரங்கினைப் போல

வாழுறியே மண்ணுக்கு மேல

.

NanjuPuram Stills

.

சரணம் 2 :

காத்தடிக்க வெயிலுமடிக்க

கடுங்குளிரு வீசியடிக்க

நேர்ந்திருக்கும் நோண்பு முடிக்க

மூச்சடக்கி நீயுமிருக்க

.

சாத்திரங்கள் சடங்குகளெல்லாம்

சாரமில்லா வாசகமல்ல

மாத்துவது எளியது அல்ல

மனம் மயங்கி ஆவதுமில்ல

.

NanjuPuram Stills

.

சரணம் 3 :

பார்த்த விழி பார்த்துக் கிடக்க

பைத்தியமா புத்தி தவிக்க

ஆத்துக்குள்ள சுழலக் கடக்க

ஆசப்பட்டு இறங்குவதில்ல

.

நேத்துப் போல இன்னைக்கி இல்ல

நெலச்சிருப்பது எதுவுமே இல்ல

வேத்துலக வாசியப் போல

வேறுபட்டு வாடுற புள்ள

.

NanjuPuram Stills

Advertisements