Nanjupuram - Monica.

[முன் குறிப்பு: இதில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. உயிரோடோ பிணமாகவோ இருக்கும் யாரையும் ஒத்திருந்தால் அது தற்செயலானதே.]

.

முதல் படம் எடுத்து விழிபிதுங்கி

விற்கத் தெரியாமல் பரிதவித்த கதையைப்

பலபேர் கேட்கிறார்கள் ஆர்வமாய்..

.

ஆச்சர்யம்தான்..

.

திரையுலகில் மூன்றில் இருவருக்கு

நேர்ந்த கதைதான் அது..

என்றாலும்

மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்வதில்

ஏதோ ஓர் ஆறுதல் அவர்களுக்கு..

.

எங்கள் கதை

திரையுலகுக்கு மட்டும்

பழகிய கதையல்ல

தமிழகத்துக்கே புளித்ததுதான்..

இதன் மூலக்கதை-

பாட்டி வடைசுட்ட கதை!

.

ராகவ் பாட்டி

நான் எண்ணைச் சட்டி

அல்லது..

நான் பாட்டி.. ராகவ் எண்ணைச் சட்டி..

நஞ்சுபுரம் தான் வடை!

.

காக்காவும் நரியும் யாரென்று

உறுதியாகச் சொல்லமுடியவில்லை

காரணம்..

எங்கள் கதையில்

இரண்டு மூன்று காக்கைகளும்

இரண்டு மூன்று நரிகளும்

உள்ளன..

.

[பின்குறிப்பு: இது கவிதை என்றோ நகைச்சுவை என்றோ நினைத்து ஏமாந்திருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல]

.

Nanjupuram_Monica

Nanjupuram_Raaghav

Nanjupuram_Raaghav Monica

Advertisements