s.ramakrishnan

இப்படி ஒரு பெரும் ஆச்சர்யம் ஆண்டின் இறுதி நாளில் எனக்காகக் காத்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பிளாக்கில் அவ்வப்போது தரவரிசைப் பட்டியல்கள், பிடித்தவைகளின் பட்டியல்களை வெளியிடுவது உண்டு. அந்தப் பட்டியல்கள் பலவகையில் எனக்கு உதவியிருக்கின்றன. மற்ற நண்பர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். தமிழில் சிறந்த பட்டியல்போடுபவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் இடத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார்.

அவர் 2012 ஆம் ஆண்டின் சிறந்தவை என்று தான் நினைக்கும் 50 விஷயங்களைப் பட்டியலாக எழுதியிருக்கிறார். அதை இன்று (டிஸம்பர் 31, 2012) அதிகாலையில் தான் படித்தேன். அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதென்பது நான் எதிர்பார்த்திராத புத்தாண்டுப் பரிசு.

எஸ். ராமகிருஷ்ணனுக்கு நன்றி.

சிறந்த சினிமா கட்டுரை: பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் – இயக்குனர் சார்லஸ்

“எனக்குப் பிடித்தவை”  http://www.sramakrishnan.com/?p=3186

இந்த ஆண்டில் (2012) நான் எந்த ஒரு பதிவும் இடவில்லை என்கிற குறையைப் போக்குவதாக இப்போது எழுதுவது அமைந்துவிட்டது என்பது மகிழ்ச்சி. பிளாக்கை திறந்தே நான் பலகாலம் ஆகிவிட்டது. இப்போது வந்து வருகைப் பதிவை (Stats) பார்த்தால் ஒரே ஆச்சர்யம். ஏராளமான வருகை நிகழ்ந்திருக்கிறது. என் பதிவுகள் தொடர்பாக எனக்குத் தனிப்பட்ட முறையில் கடிதமெழுதிய சிலருக்கும் நான் பதில் போடாததை வருத்தத்துடன் நினைவுகூர்கிறேன். புத்தாண்டில் நிறைய எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

புதிதாகப் படிக்க வந்து என்னைத் தொடர ஆரம்பித்திருக்கும் புதியவர்களுக்கு நல்வரவு.

Advertisements