IMG_1186

நண்பர்களே…

திரைப்படத் துறையிலும் தொலைக்காட்சியிலும் கடந்த பதினாறு ஆண்டுகளாக இயக்குநராகவும் திரைக்கதை எழுத்தாளனாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

திரைப்படக் கல்லூரியில் திரைக்கதையும் இயக்கமும் படித்தேன், சினிமா உலகை இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

‘நஞ்சு புரம்’ எனும் எனது முதல் திரைப்படம் 2011யில் வெளியானது. இரண்டாவது திரைப்படமான ‘அழகு குட்டி செல்லம்’ இந்த ஆண்டு வெளிவரவிருக்கிறது. அதற்கு அடுத்த படத்தின் வேலைகளில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த தளத்தில் வெளியான மூன்று கட்டுரைகளை எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் பரிந்துரை செய்து எழுதியதையும்; எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், 2012ஆம் ஆண்டின் சிறந்த சினிமாக் கட்டுரை என்று என்னுடையதைக் குறிப்பிட்டதையும்; நான் வலைப்பதிவு எழுதுவதைப் பற்றி குமுதம் இதழில் ஒரு செய்தி வெளிவந்ததையும்; சில சிற்றிதழ்களில் எனது கட்டுரைகளை எடுத்துப் பிரசுரித்ததையும் நான் பெருமையாக நினைக்கிறேன்.

ஆனால் அதைவிடவும் முக்கியமானதாக நான் கருதுவது, இப்போது திரைப்பட இயக்குனர்களாக மாறியிருக்கும், விரைவில் மாறப்போகும் சிலர் இந்தத் தளத்தின் வெகுநாள் வாசகர்கள் என்பதையும், இந்த எழுத்துக்களின் மூலம் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பதையும்தான்.

என்னுடைய வலைப்பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.

எனது மின் அஞ்சல்:  charlesfilmaker@gmail.com

நான் பணியாற்றிய படங்கள் மற்றும் தொடர்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

நன்றி

சார்லஸ்