தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

பிரிவு

பாராட்டு

2012யின் சிறந்த சினிமா கட்டுரை

s.ramakrishnan

இப்படி ஒரு பெரும் ஆச்சர்யம் ஆண்டின் இறுதி நாளில் எனக்காகக் காத்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பிளாக்கில் அவ்வப்போது தரவரிசைப் பட்டியல்கள், பிடித்தவைகளின் பட்டியல்களை வெளியிடுவது உண்டு. அந்தப் பட்டியல்கள் பலவகையில் எனக்கு உதவியிருக்கின்றன. மற்ற நண்பர்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். தமிழில் சிறந்த பட்டியல்போடுபவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் இடத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இருப்பார்.

அவர் 2012 ஆம் ஆண்டின் சிறந்தவை என்று தான் நினைக்கும் 50 விஷயங்களைப் பட்டியலாக எழுதியிருக்கிறார். அதை இன்று (டிஸம்பர் 31, 2012) அதிகாலையில் தான் படித்தேன். அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதென்பது நான் எதிர்பார்த்திராத புத்தாண்டுப் பரிசு. Continue reading “2012யின் சிறந்த சினிமா கட்டுரை”

“என் விகடன்”

‘ஆனந்த விகடன்’ இதழோடு புதிய இணைப்பாக வெளிவரும் “என் விகடன்”-யின் முதல் பிரதி வெளியீட்டு விழாவும், விகடன் ஆரம்பிக்கப்பட்டு 85 வருடங்களாவதைக் கொண்டாடும் வகையிலும் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரையில், வாரம் ஒரு பிராந்தியம் என்ற வகையில் கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, சென்னை ஆகிய நகரங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளில் திரையிடுவதற்காக நூற்றுக் கணக்கான பிரமுகர்களின் பேட்டிகளும், ‘என் விகடன்’ பற்றிய ஒரு தீம் பாடலும் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை நண்பர் அந்தோணி திருநெல்வேலி (‘நீயா நானா’ இயக்குனர்) ஏற்றிருந்தார்.

பேட்டிகளை எடுக்கும் வேலையை அவர் “நடந்தது என்ன” நிகழ்ச்சியின் இயக்குனரான நண்பர் சாய்-யிடம் ஒப்படைத்திருந்தார். தீம் பாடல் எடுத்துக்கொடுப்பதற்காக அந்தோணி என்னை அணுகினார். Continue reading ““என் விகடன்””

குமுதம்

இந்த வாரம் குமுதம் இதழில் (29-6-2011) இலக்கிய உலகம் பகுதியில் என்னைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு புகைப்படத்தோடு வெளியாகியிருக்கிறது. Continue reading “குமுதம்”

பத்திரிக்கைகளின் பாராட்டும் விமர்சனமும்

Thambi Ramaiya and Monika

4தமிழ் மீடியா இணையதளத்தில் வந்திருக்கும் என் படத்துக்கான விமர்சனம், மிகத் தீவிரமாக படத்தை அணுகி, நுணுக்கமாக உள்வாங்கிக்கொண்டு, அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் மிகக் கச்சிதமாக உணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். வெகுஜன ஊடக மொழியை முற்றிலும் தவிர்த்து, தீவிரமாக எழுதப்பட்ட முதல் ‘நஞ்சுபுரம்’ விமர்சனம் இதுதான். சுட்டி கீழே

.

நஞ்சுபுரம் – ஒரு பின் நவீனத்துவ த்ரில்லர்

இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்

என்னுடைய இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிவிட்டது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் (4/4/2011) வெளியாகியிருக்கும் ‘நஞ்சுபுரம்’ விமர்சனம். ‘மாலினி மன்னத்’ என்னும் பிரபல திரைவிமர்சகரின் அந்தக் கட்டுரையை இணையத்தில் தேடி எடுத்து இங்கு அப்படியே வெளியிடுகிறேன். (தமிழில் மொழிபெயர்க்க நேரமில்லாமைக்கு வருந்துகிறேன்)

எனது வீடியோ பேட்டி

நானும் ராகவும் இணைந்து ‘இண்டியாகிளிட்ஸ்’-க்காக கொடுத்த பேட்டியின் வீடியோ இங்கே

நஞ்சுபுரம் – விமர்சனம்

கவிஞரின் கட்டுரை

நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பற்றியும், குறிப்பாக என்னைப் பற்றியும் கவிஞர் மகுடேசுவரன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

 

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑